Take a fresh look at your lifestyle.

அழகிய இளம்பெண்ணிடம் கைவரிசையினை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி (வீடியோ)

59

அர்ஜெண்டினாவில், தற்காப்புக் கலை கற்றவரான (MMA fighter) Brisa (20) என்ற இளம்பெண்ணிடமிருந்து மொபைல் போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார் ஒரு இளைஞர். அவரைத் துரத்திப் பிடித்த Brisa, MMA ஸ்டைலில் அவரை அடி பின்னி எடுத்துவிட்டார்.

தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட நின்றவரின் காதுக்கருகே முகத்தைக் கொண்டு சென்ற Brisa, வேலைக்கு போடா அறிவு கெட்டவனே, நாங்கள் நாளெல்லாம் உட்கார்ந்து வேலை செய்து சம்பாதித்ததை, நீ மூன்று விநாடிகளில் திருடிச் செல்ல விடுவேனா என கத்துவதை வெளியான வீடியோ ஒன்றில் காணலாம்.

பொலிசார் வந்து அந்த இளைஞரை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லும்வரை, அவரை விடவில்லை Brisa.

என்ன இவ்வளவு கோபம் என்றால், இந்த கொரோனா காலகட்டத்தில், பல மாதங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்து, சேமித்த பணத்தில் ஒரு புதிய மொபைல் போனை தான் வாங்கியதாகவும், அதை அந்த இளைஞர் திருடிச் செல்ல முயன்றதால்தான் அப்படி செய்தேன் என்கிறார் Brisa.

இனி ஜென்மத்துக்கும் அவன் திருடுவானா என்று கேட்கும் Brisa, தான் செயல்பட்ட விதம் குறித்து தனக்கு பெருமைதான் என்றும், அதற்காக தான் வருந்தவில்லை என்றும் கூறுகிறார்.

%d bloggers like this: